“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி

“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி
“சினிமாத்துறையின் பெயரே கெட்டுபோய் இருக்கு” - நடிகர் ராதாரவி

#Metoo குற்றச்சாட்டுகளைக் கூறி பெண்கள் தங்களை தரம்தாழ்த்திக் கொள்ளக்கூடாது என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டதுதான் #MeToo என்ற பிரச்சாரம். இதனைதொடர்ந்து #MeToo என்ற பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.  திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

.

திரைத்துறையில் பலரும் சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Metoo குறித்து பேசியிருந்த நடிகை வரலட்சுமி திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது. பிரச்னையை உடனே வெளிப்படுத்தாமல் மூடி மறைத்ததே அதற்கு காரணம். இதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. பயத்தினாலயோ, இமேஜுக்காகவோ அதனை அவர்கள் மூடி மறைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் Metoo குறித்து மூத்த நடிகர்கள் யாரும் வாய்திறக்காத நிலையில் சென்னையில் நடைபெற்ற அவதார வேட்டை பட விழாவில் நடிகர் ராதாரவி இப்பிரச்னை குறித்து பேசினார். அதில் Metoo குற்றச்சாட்டுகளைக் கூறி பெண்கள் தங்களை தரம்தாழ்த்திக் கொள்ளக்கூடாது. திரைத்துறையில் இருப்பவர்களே அதனை கொச்சைப்படுத்தக் கூடாது எனவும், திரைத்துறைக்கும் Metoo-விற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் எனது மேலேயும் Metoo புகார் கூறியதாக கேள்விபட்டேன். அது குறித்தெல்லாம் நான் கவலை கொள்வதில்லை. சமூக வலைத்தளங்கள் இல்லாத காரணத்தினால்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக ஆனார். தற்போது திரைத்துறையில் இருந்து யாராலும் முதலமைச்சராக வர முடியாது. என்று தெரிவித்தார்.

மேலும் விளம்பரத்துக்காக புகார் கூறுபவர்களை சினிமாவில் இருந்து தள்ளிவைக்க வேண்டும். உண்மையிலேயே நான் வேதனையில் இருக்கிறேன். பல்வேறு புகார்களால் சினிமாத்துறையின் பெயர் கெட்டு போய்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சினிமாவை விட்டு என்னை வெளியேறுங்கள் என்று கூறினால் நான் சந்தோஷமாக சென்று விடுவேன். சினிமாத்துறைக்கும் metooக்கும் சம்மந்தமில்லை. அது அமைச்சர்களுக்கான விவகாரம். எதாவது புகாரைக்கூறி சினிமாத்துறையை கெடுத்துவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com