நயன்தாராவை விமர்சித்த ராதாரவி  திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!

நயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!

நயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!
Published on

நயன்தாராவை ஆபாசமாக விமர்சித்த நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நயன்தாரா நடித்துள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். ''நயன்தாரா நல்ல நடி கை. இங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். இன்று யார் வேண்டுமானாலும் சீதையாக நடிக்கலாம். ஒரு காலத்தில் சீதையாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை அழைப்போம். இன்று பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுப வர்களும் சீதையாக நடிக்கலாம்...’’ என்று கூறிவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்தைச் சொன்னார். ராதாரவியின் அந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் விக்னேஷ்சிவன், ’’பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலி ருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்க ராதாரவி இப்படி செய்கிறார். மூளை யற்றவர். அந்த குப்பையின் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது இன்னும் கவலையான விஷயம்.

இதுதான் ஒரு படத்தை விளம்பரம் செய்யும் விதம் என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதே நல்லது. என்ன நடந்தா லும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இது பரிதாபமான நிலை’’ என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அவரை, திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதுபற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான, முரசொலியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com