\
புனித் ராஜ்குமார் பிறந்தநாளில் வெளியாகும் ‘ஜேம்ஸ்’

புனித் ராஜ்குமார் பிறந்தநாளில் வெளியாகும் ‘ஜேம்ஸ்’

புனித் ராஜ்குமார் பிறந்தநாளில் வெளியாகும் ‘ஜேம்ஸ்’
Published on

நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகிறது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக ‘யுவரத்னா’ வெளியானது. அடுத்ததாக, அவர் ‘ஜேம்ஸ்’ படத்தில் நடித்து முடித்திருந்தார். அப்படத்தின் வெளியீட்டுப் பணிகளின்போதே உடற்பயிற்சி செய்யும்போது கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதாகும் புனித் ராஜ்குமார் உயிரிழந்து நான்கு மாதங்கள் கடந்தாலும் இன்னும் அவரது நினைவிடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், புனித் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ வரும் மார்ச் 17-ஆம் தேதி அவரது பிறந்தநாளில் வெளியாகிறது. சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் புனித் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன், ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு, அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், புனித்தின் சகோதரர்கள் சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஜேம்ஸ்’ கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com