பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நடிகர் புனித் ராஜ்குமார்

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நடிகர் புனித் ராஜ்குமார்
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நடிகர் புனித் ராஜ்குமார்

சமீபத்தில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக்கில் கர்நாடகாவின் சார்பாக பங்கேற்ற நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி மரியாதை செய்திருக்கிறார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்ததையடுத்து பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெற்றது. இதிலல், இந்தியாவிலிருந்து 9 பிரிவுகளில் 54 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தனும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

இந்த நிலையில், நிரஞ்சன் முகுந்தனை ஊக்குவிக்கும் விதமாக தனது வீட்டிற்கு குடும்பத்தோடு அழைத்து மரியாதை செய்திருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரின் மகனும் முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார். இந்தப் புகைப்படங்களை உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிரஞ்சன்.

ஏற்கெனவே, ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை நடிகர் மோகன்லால், சிரஞ்சீவி, தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. , பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரரை புனித் ராஜ்குமார் அழைத்து மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com