”அவர் இருந்தா கலகலப்பா இருக்கும்” - கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு விசிட் செய்த புகழ்

”அவர் இருந்தா கலகலப்பா இருக்கும்” - கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு விசிட் செய்த புகழ்
”அவர் இருந்தா கலகலப்பா இருக்கும்” - கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு விசிட் செய்த புகழ்
கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார் நடிகர் புகழ்.

’என்ன சொல்ல போகிறாய்’,‘வலிமை’ படத்திற்குப் பிறகு ‘எதற்கும் துணிந்தவன்’, ’‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, ’காசேதான் கடவுளடா’, ‘யானை’ உள்ளிட்டப் படங்கள் புகழ் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில், புகழ் கிரிக்கெட் வீரர் நடராஜனை வீட்டிற்கு நேரில் சந்தித்து நட்பு பாராட்டியுள்ளார். ”புகழ் அண்ணன் இருக்கும்போது, நான் டல்லாக இருந்ததே இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்ததற்கு நன்றி அண்ணா” என்று உற்சாகமுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார் நடராஜன்.
ஏற்கனவே, நடராஜன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், யோகி பாபு, ஆகியோருடன் நல்ல நட்பில் இருக்கிறார் என்பது. அடிக்கடி வீடியோ காலில் பேசிக்கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகின்றன. சமீபத்தில்கூட யோகி பாபுவை சந்தித்தார் நடராஜன். அவருக்கு யோகி பாபு முருகன் சிலையை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com