கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரியா வாரியர்

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரியா வாரியர்

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரியா வாரியர்
Published on

2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிடும். தற்போது 2018 ஆம் ஆண்டும் நிறைவடையக் கூடிய நிலையில் உள்ளது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், 2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல்  வெளியானது. இந்த பாடலில் பிரியா பிரகாஷ் வாரியர் தனது புருவ அசைவின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

அவருக்கு இதுவரை இன்ஸ்டாகிராமில் 6.2 மில்லியன் பேரும் ஃபேஸ்புக்கில் 6.7 லட்சம் பேரும் பின் தொடருபவர்களாக இருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் 2 வது இடத்தில் உள்ளார். பாடகி சப்னா சவுத்ரி 3 வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 4 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள 2. o திரைப்படம் 5 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற திரை பிரபலங்களில் திருமணம் குறித்தும் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் திருமணம், தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணமும் அதிகமாக தேடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com