விலையை குறைத்துக் காண்பிப்பதா? பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு!

விலையை குறைத்துக் காண்பிப்பதா? பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு!
விலையை குறைத்துக் காண்பிப்பதா? பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு!

விலையை குறைத்துக் காண்பித்ததால், நடிகர் பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சொகுசு கார்களின் பிரியர். இவரிடம் பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘லம்போர்கினி’  காரை வாங்கினார். அதற்காக, அவர் கேரளாவில் செலுத்த வேண்டிய முழு வரியையும் செலுத்தினார். 

இந்நிலையில் சமீபத்தில் இவர் ரூ.1.64 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அந்த காரை பதிவு செய்வதற்காக, வாகன நிறுவனத்தினர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்தனர். அப்போது காரின் விலையை குறைத்து ரூ.1.34 கோடி என குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் உண்மையான மதிப்பு  ரூ.1.64 கோடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்ததால், பதிவுசெய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

காரின் உண்மையான விலையை குறிப்பிடாமல் குறைத்துக் காண்பித்ததால், இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com