“விஜய்யுடன் அரசியல் குறித்து பேசியதை வெளியே சொல்ல முடியாது” – நடிகர் பிரசாந்த் பேட்டி

நடிகர் விஜய், விஷாலை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா நடிகர் பிரசாந்த்? - நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்புதிய தலைமுறை

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த், பொதுமக்களுக்கு ஹெல்மெட்டை இலவசமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து பேசிய அவர்....

Prasanth
Prasanthpt desk

“நெல்லைக்கு இன்று ஜாலியாக வந்தேன். வந்த இடத்தில் ஒரு சர்வீஸ் செய்து விட்டுச் செல்கிறேன். தலைக்கவசம் உயிர்க்கவசம் என் சொல்வார்கள். உயிர்க்கவசம் மட்டுமல்ல, குடும்பத்துக்கே அதுதான் கவசம். சாலை விபத்தினால் பலரின் உயிர் போகிறது. தலைக்கவசம் இல்லாததால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் வகையில் என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக நிறைய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்”

G.O.A.T Update...

“அந்தகன் படம் நிறைவடைந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆகும். தற்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடித்துக் கொ்டிருக்கிறேன். இரண்டு மூன்று புது அழைப்புகள் வந்துள்ளது. விரைவில் அதிலும் நடிக்க இருக்கிறேன். G.O.A.T படம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் மாதிரி கண்டிப்பாக படம் அமையும். படத்தை எல்லோரும் என்ஜாய் பண்ண வேண்டும். தியேட்டர் வந்து ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்க எல்லோரும்... படம் மீது உள்ள அந்த நம்பிக்கையை நான் இப்போதே உடைக்கக்கூடாது”

vijay
vijaypt desk

“நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா?”

“கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும். விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும்.

நான் நடிகனா நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகன் மட்டுமே இப்போதும். என்னால் மக்களுக்கு என் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நான் அவர்களுக்கு கைமாறாக இதுபோன்ற பணிகளை செய்கிறேன். அரசியல் நோக்கம் எதுவுல்லை”

‘படப்பிடிப்பு தளங்களில் அரசியல் குறித்து விஜய் உங்களிடம் பேசினாரா?’

“நண்பருடன் பேசுவதை வெளியே சொல்ல முடியுமா? அதுபோன்றுதான் விஜய்யுடன் அரசியல் தொடர்பாக பேசுவதை வெளியே சொல்ல முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com