“என் படத்தை விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை” - நடிகர் பிரசன்னா

“என் படத்தை விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை” - நடிகர் பிரசன்னா

“என் படத்தை விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை” - நடிகர் பிரசன்னா
Published on

மக்கள் துன்பத்தில் இருக்கும் போது என் படத்தை விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை  அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை உண்டாகிய இந்த விவகாரத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் மக்கள் துன்பத்தில் இருக்கும் போது என் படத்தை விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘மக்கள் உயிரைக்கொடுத்து போராடி துன்புற்றிக்கும் நேரமிது. இச்சூழலில் நேற்று வெளியாகியிருக்கும் காலக்கூத்து திரைப்படத்தை பொதுத்தளங்களில் விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை. எனினும் முதல் பட இயக்குனரான நாகராஜின் உழைப்பைக் கருதி படத்தின் விமர்சனங்களை மட்டும் ரீ ட்வீட் செய்கிறேன். மன்னிக்கவும், சாரி நாகராஜ்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com