“உங்க ‘மாஃபியா’ படம் நன்றாக இல்லை” - ரசிகர் கருத்துக்கு பிரசன்னா பதில்

“உங்க ‘மாஃபியா’ படம் நன்றாக இல்லை” - ரசிகர் கருத்துக்கு பிரசன்னா பதில்
“உங்க ‘மாஃபியா’ படம் நன்றாக இல்லை” - ரசிகர் கருத்துக்கு பிரசன்னா பதில்

‘மாஃபியா’ படம் நன்றாக இல்லை என்று கூறிய நெட்டிசன் ஒருவருக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் சமூக வலைத்தளத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஃபியா’. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் வில்லனாக நடிகர் பிரசன்னா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் உட்படப் பலரும் நடித்திருந்தனர். போதைப் பொருள் விநியோகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர், நடிகர் பிரசன்னாவை டேக் செய்து இப்படம் சம்பந்ததமாகப் போட்டக் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு பிரசன்னா அளித்துள்ள பதிலைப் பலரும் விரும்பி ரீ-ட்வீட் செய்துள்ளனர். அந்த நபர் போட்ட பதிவில் ‘மாஃபியா’ படம் நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.


அதற்கு பிரசன்னா “ஒரு படம் என்றால் ஒருவருக்குப் பிடிக்கும். மற்றொருவருக்குப் பிடிக்காது. அந்த வகையில் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com