’தலபோல வருமா’: பிரணவ் மோகன்லாலின் ‘ஹிருதயம்’ டீசரில் இடம்பிடித்த அஜித்

’தலபோல வருமா’: பிரணவ் மோகன்லாலின் ‘ஹிருதயம்’ டீசரில் இடம்பிடித்த அஜித்
’தலபோல வருமா’: பிரணவ் மோகன்லாலின் ‘ஹிருதயம்’ டீசரில் இடம்பிடித்த அஜித்

‘ஹிருதயம்’ மலையாளப் படத்தின் டீசரில் அஜித் ஓவியம் இடம்பெற்றுள்ளதால் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் - கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிருதயம்’ வரும் 2022 ஜனவரி 21 ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ‘தர்ஷனா’ பாடல் வேற லெவல் ஹிட் அடித்து காதலர்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இணைந்துள்ள நிலையில், இன்று டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசரும் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. 

காரணம், கல்லூரி கதைகளத்தை கொண்ட இப்படத்தின் டீசரில் கல்லூரி சுவற்றில் அஜித் ஓவியத்துடன் ‘தல போல வருமா’பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதுதான். மலையாள சினிமாவில் அஜித் ஓவியமும்... அஜித் பாடலின் வரிகளும் இடம்பெற்றிருப்பதால் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின், இயக்குநர் வினீத் சீனிவாசன் அஜித்தின் தீவிர ஃபேன் என்பது குறிப்பிடத்தக்கது. பல பேட்டிகளிலும் அதனை ஒரு ரசிகராக வெளிப்படுத்தியுள்ளார்.

மோகன்லால் நடிப்பில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் ’மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் சர்ப்ரைஸ் விசிட் செய்து மோகன்லாலுடன் உரையாடியதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com