சினிமா
ஏழை முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்
ஏழை முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்
தெலங்கானாவில் வறுமையில் வாடிய ஏழை முஸ்லிம் குடும்பத்திற்கு வீடுகட்டி கொடுத்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நேற்று அந்த வீட்டை அவர்களுக்கு வழங்கினார். மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டாரெட்டிபள்ளியில் மூன்று பெண்குழந்தைகள் மனைவியுடன் வறுமைமையில் வசித்து வந்த அந்த முஸ்லீம் நபருக்கு புதிதாக கட்டப்பட்டை வீட்டை அவர் வழங்கினார்.
கடந்த ஐந்து மாதங்களாக கொண்டாரெட்டி கிராமத்திற்கு பல வகைகளில் அவரது பிரகாஷ்ராஜ் பவுண்டேசன் உதவிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டைத் திறந்து வைத்து அவர்களுடன் ரம்ஜானை கொண்டாடிய புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பதிவேற்றி இருக்கிறார். பிரகாஷ்ராஜ் தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.