\
’அஜித் 61’ படத்தில் இணையும் பிரகாஷ் ராஜ்?

’அஜித் 61’ படத்தில் இணையும் பிரகாஷ் ராஜ்?

’அஜித் 61’ படத்தில் இணையும் பிரகாஷ் ராஜ்?
Published on

‘அஜித் 61’ படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, வெற்றிமாறனின் ‘விடுதலை’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில்பிஸியாக நடித்து வருகிறார். மேலும், பல வருடங்களுக்குப் பிறகு ‘விஜய் 66’ படத்திலும் நடிக்க விஜய்யுடன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், ’அஜித் 61’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com