ரியல் எஸ்டேட் போல் ஆகிவிட்டது தமிழக அரசியல் - பிரகாஷ் ராஜ்
பொதுநலத்திற்காக செயல்படும் சிறு அமைப்புகள், மக்களுடன் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், வணிகர் சங்க பேரவையின் வெள்ளையன், வழக்கறிஞர் அருள்மொழி, மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ரியல் எஸ்டேட் போல தமிழக அரசியல் மாறி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியானது தான் என்று கூறிய அவர், அவர்களுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து நிற்கும் நேரம் வரும் என்றும் கூறினார். பொதுநலத்திற்காக செயல்படும் சிறு அமைப்புகள் மக்களுடன் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், தாம் அரசியலில் இருப்பதாகவும், ஆனால் தேர்தல் அரசியல்வாதியாக அல்ல என்று தெரிவித்தார்.