பிரதீப் விஜயன்pt web
சினிமா
நடிகர் பிரதீப் விஜயன் குளியலறையில் சடலமாக மீட்பு
தெகிடி, மேயாத மான், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரதீப் விஜயன் உயிரிழந்தார்.
நடிகர் பிரதீப் விஜயன் கடந்த 2 நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் காவல்துறையிடம் அவரது நண்பர்கள் புகாரளித்தனர். இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது குளியலறையில் பிரதீப் விஜயன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தலையில் காயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.