\
ஜனவரி 14-ல் வெளியாகும் பிரபுதேவாவின் ‘தேள்’

ஜனவரி 14-ல் வெளியாகும் பிரபுதேவாவின் ‘தேள்’

ஜனவரி 14-ல் வெளியாகும் பிரபுதேவாவின் ‘தேள்’
Published on

பிரபுதேவா நடித்துள்ள ‘தேள்’ திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகிறது.

பிரபுதேவா நடிப்பில் ’தேள், ‘பஹீரா’, ‘மை டியர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷுடன் புதிய படத்திலும், பா.விஜய் இயக்கத்தில் பெயரிடாதப் படத்திலும் நடித்து வருகிறார் பிரபுதேவா. இதில், ‘தேள்’ வரும் பொங்கலையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது. அறிமுக இயக்குநர் ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார்.

பிரபுதேவா மகனாக ஈஸ்வரி ராவ் அம்மாவாகவும் நடித்துள்ள ‘தேள்’ தாய்-மகனுக்கிடையேயான பாசத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே, ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கார்பன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘நாய் சேகர்’, ‘ஐஸ்வர்யா முருகன்’ உள்ளிட்டத் திரைப்படங்கள் பொங்கலையொட்டி வெளியாகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com