நீண்ட நாட்களுக்குப்பிறகு பிரபு தேவாவுக்கு நடனம் அமைக்கும் ராஜு சுந்தரம்

நீண்ட நாட்களுக்குப்பிறகு பிரபு தேவாவுக்கு நடனம் அமைக்கும் ராஜு சுந்தரம்
நீண்ட நாட்களுக்குப்பிறகு பிரபு தேவாவுக்கு நடனம் அமைக்கும் ராஜு சுந்தரம்

நடிகர் பிரபுதேவா ’பஹீரா’ படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடல் காட்சிக்கு நடனம் அமைக்கிறார் நடன இயக்குநர் ராஜு சுந்தரம்.

’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது ‘பஹீரா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார். டீசரில் பிரபுதேவாவா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இன்னும் இளமையாக விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில், ’பஹீரா’ படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். இதனை, படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com