\
சார்லி சாப்ளின் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு

சார்லி சாப்ளின் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு

சார்லி சாப்ளின் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு
Published on

சார்லி சாப்ளின் 2 படக்குழுவினருடன் நடிகர் பிரபு தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

'சார்லி சாப்ளின்' படத்தைத் தொடர்ந்து, 'சார்லி சாப்ளின் 2' என்ற பெயரில் படமொன்றை இயக்கி வருகிறார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபுவும், 2-ம் பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபு சார்லி சாப்ளின் படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிரவுக்கு டிசம்பர் 25-ஆம் தேதி தான் பிறந்தநாள். அதாவது நேற்று. ஆனால் ஒருநாள் தாமதமாக படக்குழுவினருடன் இன்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com