ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துடன் மோதும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துடன் மோதும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துடன் மோதும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’
Published on

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துடன் பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படம் பொங்கலையொட்டி வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். 70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான, அறிவிப்பு சமீபத்தில் வெளியானாலும், மீண்டும் ஜனவரி 14 ‘ராதே ஷ்யாம்’திட்டமிட்டப்படி வெளியாகும் என்று மீண்டும் படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஜனவரி 12 ஆம் தேதி ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாளை அல்லது நாளை மறுநாள் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுக்க வசூல் சாதனை செய்த ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களை பிரபாஸ் நடிப்பில் ராஜமெளலி இயக்கியிருந்தார். இந்த நிலையில், ராஜமெளலி படத்துடன் ’ராதே ஷ்யாம்’ மோதுகிறது என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com