எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’பாகுபலி 2’ இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த பிரபாஸ், படம் வெளியானதும் விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவிருந்து இந்தியா திரும்பியதுமே, பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆலிம் ஹக்கிம்மைதான் முதலில் சந்தித்திருக்கிறார் பிரபாஸ்.
பாகுபலி 2 படத்துக்காக வளர்த்திருந்த முடியை, ஆலிம் ஹக்கிம்மிடம் சென்று அழகாக வெட்டியிருக்கிறார். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அதை ஹிக்கிம், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பிரபாஸ் அடுத்து நடிக்கவுள்ள படம், சாஹோ. அக்ஷ்ன் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் பிரபாஸ் என்ன கெட்டப்பில் வருவார் என அவரது ரசிகர்கள் இப்போதே சிந்திக்க தொடங்கி விட்டனர்.