மீண்டும் மூன்று மொழிகளில் கலக்கும் பிரபாஸ்: தொடங்கியது ஷூட்டிங்
‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சாஹூ’ படத்தில் நடித்து வருகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘சாஹூ’ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் கே.கே ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.
கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் துவக்க காட்சி இன்று படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் என பலர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மொழி எல்லைகளை கடந்து ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் பிரபாசின் இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Read Also -> இளம் நடிகர் மனைவி தற்கொலை: காரணம் என்ன?