ஜிம் ட்ரெய்னருக்கு ரூ.73 லட்சம் மதிப்புள்ள காரினை அன்பளிப்பாக வழங்கிய பிரபாஸ்.!

ஜிம் ட்ரெய்னருக்கு ரூ.73 லட்சம் மதிப்புள்ள காரினை அன்பளிப்பாக வழங்கிய பிரபாஸ்.!
ஜிம் ட்ரெய்னருக்கு ரூ.73 லட்சம் மதிப்புள்ள காரினை அன்பளிப்பாக வழங்கிய பிரபாஸ்.!

பிரபாஸ் தன்னுடைய பிட்னெஷ் ட்ரெய்னருக்கு ரூ.73 லட்சம் மதிப்புள்ள காரினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் வெளியாகியிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு பணிகள் நடந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் பிரபாஸ் தன்னுடைய பிட்னெஷ் ட்ரெய்னருக்கு Range Rover Velar SUV கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த காரின் விலை ரூ.73.30 லட்சம். தனக்கு நீண்ட காலமாக ஜிம் ட்ரெய்னராக இருந்து வரும் லஷ்மண் ரெட்டிக்கு இந்தக் காரினை பரிசாக வழங்கியுள்ளார். லஷ்மண் ரெட்டி 2010ம் ஆண்டு உலக அளவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர் ஆவார். பரிசாக வழங்கப்பட்ட காருடன் பிரபாஸ் மற்றும் லஷ்மண் ரெட்டி, அவரது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஜிம் ட்ரெய்னர் ஒருவருக்கு விலை உயர்ந்த காரினை பரிசாக கொடுத்த பிரபாஸுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். இது அவரின் அன்பை காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளனனர். சில தினங்களுக்கு முன்பு காசிபள்ளி ரிசர்வ் வனத்தின் 1650 ஏக்கர் நிலத்தை பிரபாஸ் தத்தெடுத்தார். இந்த ரிசர்வ் வனத்தின் வளர்ச்சிக்காக பிரபாஸ் 2 கோடி ரூபாய் நிதியை வனஅதிகாரிகளிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com