ரூ.7 கோடிக்கு கார் வாங்கிய 'பாகுபலி' பிரபாஸ்... ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்!
நீண்ட நாள்களுக்கு பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறார். அவர் வாங்கியுள்ள புது கார்தான் இந்த ட்ரெண்ட்டுக்கு காரணம்.
சினிமா ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் இன்றைய ஹாட் ட்ரெண்ட் என்னவென்று கேட்டால், அது 'பாகுபாலி' நடிகர் பிரபாஸ்தான். பிரபாஸ் பட ட்ரெய்லர் ஏதும் வெளியாகி இருக்கிறதா என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நடிகர் பிரபாஸ் புதிதாக `லம்போர்கினி' கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதைத்தான் அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். லம்போர்கினி அவென்டடோர் காரை பிரபாஸ் வாங்கியுள்ளார்.
ஆரஞ்சு நிறத்தில் உள்ள அந்த காரை பார்த்ததும், அது குறித்து தேட ஆரம்பித்துவிட்டனர். பிரபாஸ் வாங்கியுள்ள லம்போர்கினி காரின் மதிப்பு, ரூ.5.6 கோடி ஆகும். ஆன் ரோட் விலை உள்ளிட்ட மற்ற செலவுகளை சேர்த்தால் காரின் விலை 6-ல் இருந்து 7 கோடி ரூபாய் வரை வரும். அவர் கார் வாங்கிய புகைப்படங்கள், காரை ஒட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் போன்றவை வைரலாகி வருகிறது.
இதைவிட இன்னொரு முக்கிய விஷயம், நடிகர் பிரபாஸ் தனது தந்தையின் பிறந்தநாளில் இந்த காரை வாங்கியுள்ளார். இதனால் இது அவருக்கு ஸ்பெஷலானது என்று பலர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
'பாகுபலி' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிரபாஸ் தெலுங்கு, தமிழை தாண்டி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இதனால் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'சாஹோ' இந்தியா முழுவதும் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. ஆனால், அந்தப் படம் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
தற்போதும் ‘ரதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ ஆகிய தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்களும் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படி தனது அடுத்தப் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வேளையில்தான் தற்போது புதிதாக கார் வாங்கியுள்ளார் பிரபாஸ்.