பிரபாஸ்சின் சண்டைக் காட்சியை இயக்குகிறார் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்
பிரபாஸ் படத்தின் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ், சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சாஹோ படத்திற்காக சற்றே தனது உடலை இளைத்து மிகவும் வசிகரமான தோற்றத்தில் அவர் நடித்திருக்கிறார். பிரபாஸின் பிறந்தநாள் வரும் 23ம் தேதி வருகிறது. ஆகவே பிரபாஸின் பிரத்யேக படங்களை அக்டோபர் 22ம் தேதி இரவு வெளியிட உள்ளனர். அதைத் தொடர்ந்து சாஹோ படம் உருவான வீடியோ, பட போஸ்டர்கள் மேலும் ரசிகர்களுக்காகத் தனது பிரத்யேக வீடியோ ஒன்றையும் பிரபாஸ் வெளியிட உள்ளார்.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிக்காக அடுத்த மாதம் படக்குழு துபாய் செல்கிறது. அந்தப் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் இயக்கவுள்ளார்.