பணம் புகழை விட... பொன்வண்ணனின் சென்டிமென்ட் ஓவியம்!

பணம் புகழை விட... பொன்வண்ணனின் சென்டிமென்ட் ஓவியம்!

பணம் புகழை விட... பொன்வண்ணனின் சென்டிமென்ட் ஓவியம்!
Published on

இயக்குனரும் நடிகருமான பொன் வண்ணன் ஓர் ஓவியரும் கூட. ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ள பொன்
வண்ணன், தான் வரைந்த சென்டிமென்ட் ஓவியம் ஒன்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதுதான் இந்த ஓவியம்.
அதற்கு கீழே, அவர் எழுதியிருந்த பதிவு இது:

இந்த பென்சில் ஓவியத்திற்கு பின் ஒரு மிகப்பெரிய உணர்வு அடங்கி இருக்கு. பாரதிராஜா சாரிடம் நான் உதவியாளராக
சேர்ந்த படம், ’என் உயிர்த்தோழன்’ . அங்கு எனக்கு நண்பனானவன் பாபு. அந்த படத்தின் ஹீரோ அவன் தான். அதற்கு
பின் பல படங்களில் ஹீரோவாக வளர்ந்து வந்த அவன், ஒரு படப்பிடிப்பில் விபத்துக்குள்ளாகி கடந்த 30 வருடங்களாக
படுத்த படுக்கையாகிவிட்டான். எந்த கடவுளாவது என்னை மீட்டெடுக்க மாட்டார்களா என்ற நம்பிக்கையில்
"கிருஸ்த்துவை" துணைக்கு அழைத்துகொண்டிருந்த நேரத்தில், அவன் நம்பிக்கைக்கு நான் வரைந்து தந்த ஓவியம் இது.
இதை பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் அவனை, தினம் ஒரு முறையேனும் நான்
நினைத்துக்கொள்வேன். உடல் ஆரோக்கியம் என்பது பணம், புகழ், பதவி எல்லாவற்றையும் விட மீறியது என்பதை ,
தினம் தினம் எனக்கு உணர வைப்பவன் பாபுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com