இது தெலுங்கின் நேர்கொண்ட பார்வை: பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 

இது தெலுங்கின் நேர்கொண்ட பார்வை: பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 
இது தெலுங்கின் நேர்கொண்ட பார்வை: பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 

டோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் பவன் கல்யாணின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வக்கீல் சாப்’. 

போனீ கபூர் தயாரிக்கும் இந்தப்படம் ‘பிங்க்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ படங்களின் ரீமேக்காகும். 

எம்.சி.ஏ படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் வேணு இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் தமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். 

நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

அதனை பவனின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் அஜித் குமார் நடிப்பின் வெளிவந்த ‘வீரம்’ படத்தை பவன் ரீமேக் செய்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com