\
பூஜையுடன் தொடங்கிய நடிகர் பசுபதியின் புதிய படம்

பூஜையுடன் தொடங்கிய நடிகர் பசுபதியின் புதிய படம்

பூஜையுடன் தொடங்கிய நடிகர் பசுபதியின் புதிய படம்
Published on: 

நடிகர் பசுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில், சார்பட்டா பாக்ஸிங் பரம்பரையின் பயிற்சியாளர் ரங்கன் வாத்தியாராக எதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்த்து ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தார் பசுபதி. அவரை ஆர்யா சைக்கிளில் ஏற்றிச்செல்லும் புகைப்படங்கள் மீம்ஸ்களாய் வைரலாகிக்கொண்டிருக்கும் சூழலில் பசுபதியின் அடுத்தப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

பசுபதியுடன் நடிகை ரோகிணி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ராம் சங்கையா இந்தப் படத்தை இயக்குகிறார். சுந்தர மூர்த்தி இசையமைக்கிறார். கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் மூவி நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com