தமிழிசை மீதான கிண்டல் கண்டிக்கத்தக்கது: நடிகர் பார்த்திபன்
தமிழிசை மீதான கிடண்டல் கண்டிக்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் கருத்திட்டு இருக்கிறார்.
திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் தமிழிசை உருவத்தை குறிப்பிட்டு சிலர் வசை பாடி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “திருமதி தமிழிசை அவர்களின் உருவ(பொம்மை)கிண்டல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தோற்றத்தை கேலி செய்வது மனிதமல்ல”என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை குறித்து ஹெச்.ராஜா உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற தொனியில் பேசியிருந்தார். அதற்கு பார்த்திபன், “ராஜா கமெண்ட் உப்பை தின்னவன் ...எந்த உப்பு? இந்து உப்புன்னு வேற ஒண்ணிருக்கு.” என்று மத அரசியலை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

