\
’அசுரன்’ புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

’அசுரன்’ புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

’அசுரன்’ புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு
Published on: 

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்.

கொரோனா இரண்டாம் அலையால் திரைத்துறையினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல திறமைமிக்க கலைஞர்களையும் நாம் இழந்துகொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘கபாலி’ மற்றும் ‘அசுரன்’ போன்ற திரைப்படங்களில் நடித்த நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு முன்பு நேற்றிரவு நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அடுத்தடுத்த திரைப்பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகி வருவது திரைத்துறையினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com