\
ஜெய் நடிக்க, பிச்சுமணி இயக்க, தயாரிப்பாளர் ஆனார் நிதின் சத்யா!

ஜெய் நடிக்க, பிச்சுமணி இயக்க, தயாரிப்பாளர் ஆனார் நிதின் சத்யா!

ஜெய் நடிக்க, பிச்சுமணி இயக்க, தயாரிப்பாளர் ஆனார் நிதின் சத்யா!
Published on

ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் நிதின் சத்யா.

சென்னை 28, சத்தம் போடாதே, சரோஜா, அரண்மனை உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நிதின் சத்யா. இவர் இப்போது ஷிவேத் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம், ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதை வெங்கட்பிரபுவுன் உதவியாளர் பிச்சுமணி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. 
தயாரிப்பாளர் ஆனது ஏன் என்பது பற்றி நிதின் சத்யாவிடம் கேட்டபோது, ’தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனேயே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாக தெரியும். இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானவராக இருப்பார் என தோன்றியது.  அவரிடம் கதையை சொன்னபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார். படத்தை நிதின் சத்யாவுடன் இணைந்து அவரது நண்பர் பத்ரி கஸ்தூரியும் தயாரிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com