\
கார் விபத்து: உயிர் தப்பினார் நடிகர் நானி!

கார் விபத்து: உயிர் தப்பினார் நடிகர் நானி!

கார் விபத்து: உயிர் தப்பினார் நடிகர் நானி!
Published on

நடிகர் நானியின் கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

தமிழில், ‘வெப்பம்’, ’நான் ஈ’, ’ஆஹா கல்யாணம்’ படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நானி. இவர் ’கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ என்ற தெலுங்கு படத்தில் இப்போது நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பின், நேற்று காலை தனது இன்னோவா காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார். நானி, பின் சீட்டில் இருந்தார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின் கம்பம் ஒன்றில் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. டிரைவர் மற்றும் நானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இருவரும் அங்கிருந்து வேறு கார் மூலம் சென்றுவிட்டனர். 

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட நானி, ‘அங்கும் இங்குமாக சின்ன சின்ன சிராய்ப்புகள்தான். வேறு காயம் ஏதும் இல்லை. இந்த விபத்து காரணமாக ’யுத்தம்’ ஷூட்டிங்கிற்கு சின்ன பிரேக். விரைவில் ஆக்‌ஷன் தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com