நடிகர் நாகேஷுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: சென்னை சாலைக்கு அவர் பெயர் சூட்டவேண்டும்: கமல்

நடிகர் நாகேஷுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: சென்னை சாலைக்கு அவர் பெயர் சூட்டவேண்டும்: கமல்
நடிகர் நாகேஷுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: சென்னை சாலைக்கு அவர் பெயர் சூட்டவேண்டும்: கமல்

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாளையொட்டி “ சென்னையின் ஒரு சாலைக்கு நாகேஷ் பெயரை சூட்டவதோடு, அவர் பெயரில் ஒரு விருதினை தமிழக அரசு தோற்றுவிக்கவேண்டும்” என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று தனது 76 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாகேஷ் இறக்கும் வரை கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். நாகேஷ் - கமல்ஹாசன் கூட்டணி எப்போதும் கவனம் ஈர்த்தே வந்திருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் “ நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com