’’பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல’’- சர்ச்சையில் முகேஷ் கண்ணா

’’பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல’’- சர்ச்சையில் முகேஷ் கண்ணா

’’பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல’’- சர்ச்சையில் முகேஷ் கண்ணா
Published on

இந்தி நடிகர் முகேஷ் கண்ணா பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல என்று கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’சக்திமான்’ மற்றும் ’மகாபாரதம்’ தொடர்களின்மூலம் மக்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் முகேஷ் கண்ணா. இவர் சமீபத்தில் தி ஃபில்மி சார்சா சேனலுக்கு கொடுத்த பேட்டியின் ஒரு க்ளிப் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘’பெண்களின் வேலை வீட்டை பராமரிப்பதுதான். பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததால்தான் #MeToo போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இன்றைய பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருக்கவேண்டும் என்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், ‘’பெண்களின் விடுதலைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அங்குதான் பிரச்னைகள் ஆரம்பிக்கிறது. இதில் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். ஏனென்றால் அவர்களை பராமரிக்க தாய்மார்கள் வீட்டில் இருப்பதில்லை. அதனால் அந்த குழந்தை தன்னை பராமரிப்பவருடன் நாள்முழுதும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஆண்கள் செய்யும் வேலையும் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறுவதுதான். ஆனால் ஆண்கள் ஆண்கள்தான், பெண்கள் பெண்கள்தான்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்கள் காரசாரமான கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியில் ஒளிபரப்பாகும் கபில் ஷர்மா ஷோவில் பங்குபெற அழைத்ததற்கு, அந்த நிகழ்ச்சியைப் பற்றி இவர் தரக்குறைவாகி பேசி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com