\
ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

மூன்று தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

தமிழில் தயாரிப்பாளர் தாணு வெளியீட்டில் ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வரும் 17 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com