ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் கேரக்டரில் நடிகர் மம்முட்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள திரை உலகில் உச்சநடிகராக இருப்பவர் மம்முட்டி. இவர் முன்னாள் ஆந்திர முதல்வர் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால் அது குறித்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தப் படத்திற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஒஎஸ் ராஜசேகர் ரெட்டி கதாப்பாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ள படத்திற்கு ‘யாத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அதனை மஹி வி ராகவ் இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அப்படத்தின் இயக்குநர் மஹியே ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 70எம்எம் எண்டர்டெய்ண்ட்மெண்ட்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.