மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷின் ‘சர்காரு வாரி பாட்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷின் ‘சர்காரு வாரி பாட்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷின் ‘சர்காரு வாரி பாட்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். மகேஷ் பாபுவே தயாரித்து நடிக்கும் இப்படம் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி சங்கராந்தியையொட்டி வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா சூழலால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தது படக்குழு.

இந்த நிலையில், ‘சர்காருவாரி பாட்டா’ வரும் மே 12 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதேமாதம், கார்த்தியின் ‘விருமன்’, உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com