மகேஷ் பாபுவின் ’சர்காரு வாரி பாட்டா’ - அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. குறிப்பாக, ‘கலாவதி’ பலரின் ஃபேவரிட்டாக உள்ளது. வரும் மே 12 ஆம் தேதி ‘சர்காரு வாரி பாட்டா’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது. ஏற்கனவே, படப்பிடிப்பை முடித்திருந்தாலும் மகேஷ்பாபுவுக்காக சில சண்டைக் காட்சிகளை எடுத்து நேற்றுடன் முழு பணிகளையும் முடித்துள்ளனர்.
இதனை நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார். மே 13 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியாவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை, அட்லீயின் உதவி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.