ஸ்டைலிஷ் லுக்கில் மகேஷ் பாபு - நர்மதா தம்பதி: வைரலாகும் போட்டோஷூட்

ஸ்டைலிஷ் லுக்கில் மகேஷ் பாபு - நர்மதா தம்பதி: வைரலாகும் போட்டோஷூட்
ஸ்டைலிஷ் லுக்கில் மகேஷ் பாபு - நர்மதா தம்பதி: வைரலாகும் போட்டோஷூட்

நடிகர் மகேஷ் பாபு தனது மனைவி நர்மதா சிரோட்கருடன் எடுத்த ஃபோட்டோஷூட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா சிரோட்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். உலக அழகிப் போட்டியில் பங்கேற்று 6 வது இடத்தையும் பிடித்தார். மாடலிங் மூலம் பாலிவுட் படங்களில் நடித்தவர், கடந்த 2000 ஆம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து ‘வம்சி’ படத்தில் நடித்தார். அதுதான், அவரின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுவுடன் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான ஜோடியான இத்தம்பதிகளுக்கு கெளதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

தெலுங்கு நடிகர்களின் மனைவிகள் இன்ஸ்டாகிராமில் இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட் செய்த புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஆனால், நர்மதா சிரோட்கர் எப்போதாவது குழந்தைகள் மற்றும் மகேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படத்தையே பகிர்ந்துகொள்வார். இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு இந்தத் தம்பதிகள் Hello பத்திரிகைக்காக போட்டோஷூட் எடுத்துக்கொண்டனர்.

மகேஷ் பாபுவுடன் நர்மதா செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ‘வேற லெவல்’ என்று சொல்ல வைப்பதோடு, அவர் ஒரு மாடல் என்பதை நினைவூட்டுகின்றன.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதோடு ட்ரெண்டிங்கும் ஆகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com