காலையில் கோவில் கலை நிகழ்ச்சி; இரவில் திடீர் மரணம்.. நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த துயரம்

காலையில் கோவில் கலை நிகழ்ச்சி; இரவில் திடீர் மரணம்.. நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த துயரம்

காலையில் கோவில் கலை நிகழ்ச்சி; இரவில் திடீர் மரணம்.. நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த துயரம்
Published on

திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 43.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அல்லி நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான். சுமார் 3 அடி உயரம் கொண்ட இவர் ‘வெங்காயம்’, ‘ஐம்புலன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தாலும், கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருச்செங்கோடு அருகே மோடமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் வீட்டிற்கு சென்று உறங்கிய லிட்டில் ஜான் காலையில் எழுந்திருக்கவில்லை.

வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்தவாறு இருந்தநிலையில், மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பரிசோதனை செய்ததில், லிட்டில் ஜான் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அவரது மரணத்துக்கு சக நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். லிட்டில்ஜான் இறுதிசடங்கு அல்லிநாயக்கன்பாளையத்தில் நடந்தது. இதில் பல்வேறு கலை குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.                

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com