நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’
Published on

நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் ‘நட்புனா என்னனு தெரியுமா’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கவின், வினித் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின், மோஷன் போஸ்டரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டிருந்தார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘லிஃப்ட்’ படம் நேரடியாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com