\
அட்லீ உதவி இயக்குநரின் காதல் வெப் சீரிஸில் நடிக்கும் கவின்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்லீ உதவி இயக்குநரின் காதல் வெப் சீரிஸில் நடிக்கும் கவின்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்லீ உதவி இயக்குநரின் காதல் வெப் சீரிஸில் நடிக்கும் கவின்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

’ஆகாஷ் வாணி’ என்ற புதிய காதல் வெப் சீரிஸில் நடிக்கிறார் நடிகர் கவின்.

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து, அவரது நடிப்பில், ‘லிஃப்ட்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மேலும், கவின் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படங்களிலும் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கவின் நடிக்கும் வெப் சீரிஸ் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

’ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் கவினுக்கு ஜோடியாக சமீபத்தில் வைரல் ஹிட் அடித்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலில் நடித்த ரெபா ஜான் இணைந்திருக்கிறார்.

’ராஜா ராணி’, ’தெறி’, ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ போன்ற திரைப்படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எனாக் ஏபிள், இதனை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட வெப் சீரிஸ் என்று இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com