கமல்ஹாசனுக்கு காமெடி நடிகர் ஆதரவு

கமல்ஹாசனுக்கு காமெடி நடிகர் ஆதரவு

கமல்ஹாசனுக்கு காமெடி நடிகர் ஆதரவு
Published on

காமெடி நடிகர் ஒருவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘பீட்சா’ மூலம் படம் மூலம் அதிகமாக அறியப்பட்டவர் காமெடி நடிகர் கருணாகரன். இவரது நடிப்பில் வெளியான ‘காசு பணம் துட்டு..மணி..மணி..’ பாடல் பெரிய வெற்றியடைந்தது. சினிமா உலகம் சார்ந்து மட்டுமே கருத்து கூறி வந்தவர் தடாலடியாக கமல்ஹாசனுக்கு ஆதரவாக ட்விட்டர் களத்தில் குதித்துள்ளார். அவரது பதிவில் “கமல்ஹாசனை விமர்சிப்பவர்களை அழைத்து வருவோம். கமம் முன்னால் அவர்களை தொலைக்காட்சியின் நேரடி விவாதத்தில் எதிரும் புதிராக உட்கார வைத்து விவாதிக்க சொல்லுவோம். அங்கே அவர் சொல்வதை தவறு என்று நிருப்பிக்க சொல்லுங்கள்” என்று சவால் விடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கமலை ஆதரித்து வரும் நிலையில் இப்போது கருணாகரனும் களத்தில் குதித்திருப்பது கவனத்திற்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com