\
‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்

‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்

‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்
Published on

சர்கார் ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் விஜயின் பேச்சு அரசியல் தொடர்பாக அமைந்தது. சர்காரின் மேடைப்பேச்சுக்கு பிறகு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் விஜய் குறித்த தங்களின் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜயின் குட்டிக்கதையை மறைமுகமாக விமர்சனம் செய்த கருணாகரன், “குட்டி கதைகள் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? அறிவுரை கூறும் நடிகர்களின் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

விஜயை மறைமுகமாக சாடியதால் கொந்தளித்த அவரது ரசிகர்கள், ட்விட்டரில் கருணாகரனை வசைபாடத்தொடங்கினர். அதற்கு பிறகு கருணாகரனும் விஜய் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ட்விட்டரில் வார்த்தை போர் புரிந்து வருகின்றனர். ட்விட்டரில் நீடித்து வரும் பிரச்னை குறித்து பேசிய நடிகர் கருணாகரன் ''இன்று மட்டும் விஜய் ரசிகர்கள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி மூலம் எனக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர் விஜய்க்கு எதிராக எந்த கருத்தையும் நான் பதிவிடவில்லை.விஜய் சொன்ன குட்டி கதை தொடர்பாகத்தான் கருத்து பதிவிட்டேன். எனக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நாளை புகார் கொடுக்கவுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com