25 ஆண்டு கால இசைப்பயணம் : யுவனுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் கார்த்தி

25 ஆண்டு கால இசைப்பயணம் : யுவனுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் கார்த்தி
25 ஆண்டு கால இசைப்பயணம் : யுவனுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் கார்த்தி

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் வாட்ச் பரிசளித்துள்ளார் நடிகர் கார்த்தி.

நடிகர் கார்த்தி ஹீரோவான ‘பருத்திவீரன்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். கார்த்தியின் நடிப்புப் போற்றப்பட்டாலும் இன்னொரு வீரனாய் படத்திற்கு யுவனின் இசை பலம் கூட்டியது. இதனைத்தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘பையா’, ‘பிரியாணி’ உள்ளிட்டப் படங்களில் இசையமைத்திருக்கும் யுவன் மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘விருமன்’படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் வாட்ச் பரிசளித்து நட்பைப் போற்றியுள்ளார் கார்த்தி. ஏற்கனவே, விருமானுக்காக யுவன் இசையமைத்து சித் ஸ்ரீராம் பாடிய ’கஞ்சா பூவு கண்ணால’ பாடலின் ப்ரோமோ வீடியோ சுமார் 3.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று இன்னும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

‘விருமன்’ தவிர, இன்னும் இரண்டு திரைப்படங்கள் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான ’பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சர்தார் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்புத் தரப்பு விரைவில் அறிவிக்கவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com