\
’தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு பிரச்னை வந்தால் சட்டப்படி நடவடிக்கை’ - நடிகர் கார்த்தி

’தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு பிரச்னை வந்தால் சட்டப்படி நடவடிக்கை’ - நடிகர் கார்த்தி

’தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு பிரச்னை வந்தால் சட்டப்படி நடவடிக்கை’ - நடிகர் கார்த்தி
Published on: 

தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் உதவுவது அவசியம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதில் 'எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில படங்களுக்கு பிரச்னை வரும்போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியாக நடிகர்சங்கம் உதவுவது அவசியம் எனத் தெரிவித்தார். எனவே, அதை நடிகர் சங்கம் செய்யும் எனவும் கார்த்தி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com