நடிகர் கார்த்தி வெளியிட்ட இட்லி டீசர்

நடிகர் கார்த்தி வெளியிட்ட இட்லி டீசர்

நடிகர் கார்த்தி வெளியிட்ட இட்லி டீசர்
Published on

அப்பு மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இட்லி திரைப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

வித்யாதரன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் இட்லி. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இது ஒரு நகைச்சுவை படம். கூடவே சமூக செய்தியையும் சொல்லி இருக்கிறோம். அதேபோல திட்டமிட்டப்படி இருபத்தி ஒன்பதே நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும். அதே சமயம் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும். இதுதான் எங்களது ஆசை. அந்த யோசனையில் தோன்றிய கதை கருவைதான் படமாக்கி இருக்கிறோம். வயதான மூன்று பாட்டிகள்தான் படத்தின் ஹீரோக்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் கதை களம். படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் எதுவுமே கிடையாது. இதுவே இட்லியின் ஸ்பெஷல் என்கிறார் இதன் இயக்குநர். 
இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிததக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com