\
இன்று இரவு 8 மணிக்கு ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி சாட்டிங்

இன்று இரவு 8 மணிக்கு ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி சாட்டிங்

இன்று இரவு 8 மணிக்கு ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி சாட்டிங்
Published on: 

இன்று இரவு 8 மணிக்கு ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி சாட் செய்ய உள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் காவல்துறையை புகழ்ந்து பேசுவதாகவும் வேறுசிலர் குறிப்பிட்ட வகுப்பினரை தவறாக சித்தரித்திருப்பதாகவும் மாறிமாறி சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். கருத்துக்கள் எப்படி இருந்தாலும் படம் எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதனை கொண்டாடும் நோக்கில் நேற்று படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிலையின் இன்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரவு எட்டு மணிக்கு தன்னுடன் சாட் பண்ண வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உங்களின் கேள்விகளை இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் #AskTheeran என்ற ட்விட்டர் ஹேஷ்டாக்கை பயன்படுத்தும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com