\
இரட்டைக் கதாபாத்திரங்களில் கார்த்தி: மைசூரில் ‘சர்தார்’ சண்டைக் காட்சி படமாக்கம்

இரட்டைக் கதாபாத்திரங்களில் கார்த்தி: மைசூரில் ‘சர்தார்’ சண்டைக் காட்சி படமாக்கம்

இரட்டைக் கதாபாத்திரங்களில் கார்த்தி: மைசூரில் ‘சர்தார்’ சண்டைக் காட்சி படமாக்கம்
Published on

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, முத்தையாவின் ‘விருமன்’ படங்களில் நடித்துவரும் நடிகர் கார்த்தி மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷிகண்ணா நடிக்கிறார். யூகி சேது, ரஜிஷா விஜயன், முரளி வர்மா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இரண்டு கார்த்திக்கும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன.

சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக சண்டைக் காட்சிக்காக மொத்த படக்குழுவும் தற்போது மைசூருக்கு சென்றுள்ளது. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன்குமார் தயாரித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com