சர்தார்.. வெளியானது கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

சர்தார்.. வெளியானது கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

சர்தார்.. வெளியானது கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்
Published on

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் 'சுல்தான்' திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றியைக் கொடுத்தது. தற்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது

கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'சர்தார்' படத்தில் நடிகர் கார்த்தி, வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதுபோல் தெரிகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com