கமல்ஹாசனின் ‘விக்ரம்’ இசை, டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ இசை, டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ இசை, டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

’விக்ரம்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கியமான படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ உலகம் முழுக்க வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார் என்பதால் மேலும் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com